மும்பையை வீழ்த்தி மாஸ் காட்டிய லக்னோ அணி!

74பார்த்தது
மும்பையை வீழ்த்தி மாஸ் காட்டிய லக்னோ அணி!
2024 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இதுவரை 65 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளன. இதில் ப்ளே ஆஃப் சுற்றுக்கு கொல்கத்தா அணி முதலாக முன்னேறியது. தொடர்ந்து ராஜஸ்தான் அணி முன்னேறியது. பஞ்சாப், குஜராத், மும்பை அணிகள் அதற்கான தகுதியினை இழந்தன.

இந்த நிலையில், நேற்று (மே 17) மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற 67வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்-லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. 20 ஓவர்களின் முடிவில் லக்னோ அணி 6 விக்கெட்களை இழந்து 214 ரன்களை குவித்தது. 215 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர் முடிவில் 196 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதன் மூலம் லக்னோ 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தொடர்புடைய செய்தி