கள்ளத்தொடர்பு: 2வது மனைவியை கொன்ற கணவன்

56பார்த்தது
கள்ளத்தொடர்பு: 2வது மனைவியை கொன்ற கணவன்
கடலூர் முதுநகர் அருகே சோனங்குப்பத்தை சேர்ந்தவர் பழனிவேல் மகன் ரமேஷ் (37). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி இந்துமதி (35). மேலும் ரமேஷ் இந்துமதியின் தங்கை சூர்யா (33) என்பவரையும் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் சூர்யா கடலூர் முதுநகரில் வேறு ஒரு நபருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்துள்ளார். 6 மாதங்களுக்கு முன் வெளிநாட்டிலிருந்து வந்த ரமேஷ் இதனை கண்டித்துள்ளார். ஆனாலும் அதனை பொருட்படுத்தாமல் கள்ளத்தொடர்பை சூர்யா தொடர்ந்துள்ளார். இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் சூர்யாவை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு ரமேஷ் தப்பி சென்றுள்ளார். போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி