லட்சத்தீவில் பிடிபட்ட தூத்துக்குடி மீனவர்கள் விடுவிப்பு

55பார்த்தது
தூத்துக்குடி லட்சத்தீவு கடற்பகுதியில் மீன்பிடித்த தருவைகுளம் பகுதியைச் சேர்ந்த 10 மீனவர்களை லட்சத்தீவை சேர்ந்த கடலோர பாதுகாப்பு காவல்துறையினர் கைது செய்து லட்சத்தீவு மீன்வள துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்த நிலையில் தற்போது 10 மீனவர்கள் மற்றும் விசைப்படகை விடுவித்து உள்ளதாக தகவல்


தூத்துக்குடி தருவைகுளம் பகுதியைச் சேர்ந்த முத்துப்பாண்டி உள்ளிட்ட 10 மீனவர்கள் கடந்த 16ஆம் தேதி ஒரு விசைப்படகில் ஆழ்கடலில் தங்கி மீன் பிடிக்க சென்றனர் அப்போது தூத்துக்குடி கடல் பகுதியில் இருந்து சுமார் 350 கடல் மைல் தொலைவில் லட்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்

அப்போது அங்கே வந்த லட்சத்தீவு கடலோர பாதுகாப்பு காவல்துறையினர் மீன் பிடிக்க தடை செய்யப்பட்ட தங்கள் கடல் பகுதியில் வந்து மீன்பிடிப்பதாக கூறி பத்து மீனவர்கள் மற்றும் விசைப்படகை பிடித்து லட்சத்தீவு மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்


இதைத் தொடர்ந்து லட்சத்தீவு மீன்வளத் துறை அதிகாரிகள் மீனவர்களிடம் மீன் பிடிக்க தான் வந்தார்களா அல்லது வேறு எதற்கும் வந்தார்கள் என விசாரணை நடத்தி வந்த நிலையில் தற்போது 10 மீனவர்கள் மற்றும் விசைப்படகை விடுவித்து உள்ளனர் இதைத் தொடர்ந்து விடுவிக்கப்பட்ட 10 மீனவர்களும் விசைப்படகு மூலம் தூத்துக்குடி தருவைகுளம் பகுதிக்கு வருகை தர உள்ளனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி