வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாறிய பின்னர் நகரும் வேகம் அதிகரித்துள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. 13 கி.மீ. வேகத்தில் நகர்ந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஃபெங்கல் புயலாக மாறிய பின் 15 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. தற்போது, சென்னையில் இருந்து தென் கிழக்கே 250 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 230 கி.மீ. தொலைவிலும் ஃபெஞ்சல் புயல் நிலை கொண்டுள்ளது.