பள்ளித்திறந்த அன்றே மாணவர்களுக்கு புத்தகம் வழங்கிய அமைச்சர்

75பார்த்தது
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டது தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி மற்றும் பாட புத்தகங்களை அமைச்சர் கீதா ஜீவன் வழங்கினார்

தமிழகம் முழுவதும் பள்ளிகள் கோடை விடுமுறையை நிறைவு செய்து இன்று அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டன அந்த வகையில் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளிகள் இன்று காலை திறக்கப்பட்டது இதைத்தொடர்ந்து மிகவும் ஆர்வத்துடன் ஏராளமான மாணவ மாணவியர் பள்ளிக்கு வருகை தந்தனர் அந்த வகையில் தூத்துக்குடி டுவிபுரத்தில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் வருகை தந்த மாணவ மாணவிகளுக்கு வரவேற்பு அளித்து காலை சிற்றுண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு காலை சிற்றுண்டியாக வெஜிடபிள் பிரியாணி மற்றும் சாம்பார் உள்ளிட்டவர்களை வழங்கினார் மிகவும் ஆர்வத்துடன் மாணவ மாணவியர் காலை உணவை அருந்தினார்கள் தொடர்ந்து பள்ளி திறந்தவுடன் பாடப் புத்தகங்கள் வழங்க வேண்டும் என தமிழக அரசு தெரிவித்தது தொடர்ந்து இன்று அந்த பள்ளியில் உள்ள மாணவ மாணவிகளுக்கு பாடப் புத்தகங்களையும் அமைச்சர் கீதா ஜீவன் வழங்கினார் மேலும் இந்த பள்ளிக்கு வருகை தந்த பெற்றோரிடமும் கலந்துரையாடினார்

தொடர்புடைய செய்தி