விளாத்திகுளத்தில், பிரபல தமிழ் எழுத்தாளர் பா. செயப்பிரகாசம் மரணம்: இரங்கல் கூட்டம் நடத்திய எழுத்தாளர்கள்: கடைசி ஆசையின்படி, மருத்துவக் கல்லூரிக்கு உடல் தானம்!
விளாத்திகுளம் அருகே உள்ள இராமச்சந்திரபுரம் கிராமத்தை சேர்ந்த பா. செயப்பிரகாசம் என்ற பிரபல தமிழ் முற்போக்கு எழுத்தாளர் மற்றும் செய்தி மற்றும் விளம்பரத் துறையின் முன்னாள் இணை இயக்குனர் கடந்த 23. 10. 2022 ஞாயிற்றுக்கிழமை மாலை விளாத்திகுளம் அம்பாள் நகரில் உள்ள அவரது இல்லத்தில் திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இந்நிலையில், இன்று (25. 10. 2022) எழுத்தாளர்கள் சார்பில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான எழுத்தாளர்கள் கலந்து கொண்டு எழுத்தாளர் பா. செயபிரகாசத்தினுடனான நட்பு பற்றி தங்களது அனுபவங்களை பகிர்ந்து வீரவணக்கம் செலுத்தினர். மேலும் பல்வேறு சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் மூலமாக கரிசல் இலக்கிய உலகில் தனி இடம் பிடித்த இவர் தனது கடைசி ஆசையாக. அவரது உடலை தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரிக்கு தானம் செய்துள்ளார். அதன்படி, எழுத்தாளரின் குடும்பத்தினர் சார்பில், அவரது உடல் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள இராமச்சந்திரபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பிரபல தமிழ் எழுத்தாளர் பா. செயப்பிரகாசம், இவருக்கு மணிமேகலை என்ற மனைவியும், தீபன், சாரு நிலா என்ற மகன் மற்றும் மகள் உள்ளனர். பிரபல எழுத்தாளரும், பேச்சாளருமாக திகழ்ந்த பா. செயப்பிரகாசம், சூரிய தீபன் என்ற புனைப்பெயரில் சிறுகதைகள், கவிதைகள் போன்ற பல்வேறு சமூக அக்கறையுடனான படைப்புகளை எழுதியுள்ளார். அதுமட்டுமின்றி, இவர் கல்லூரியில் விரிவுரையாளராகவும், தமிழக அரசின் செய்தி மற்றும் விளம்பர துறையின் இணை இயக்குனராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
கரிசல் மண் இலக்கியத்தில் சிறந்த முற்போக்கு எழுத்தாளராகவும், சொற்பொழிவாளராகவும் திகழ்ந்த இவர், விளாத்திகுளம்: அம்பாள் நகரில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று முன்தினம் (23. 10. 2022) மாலையில் திடீர் மாரடைப்பு காரணமாக இயற்கை எய்தினார். இந்நிலையில், இன்று (25. 10. 2022) செவ்வாய் கிழமை எழுத்தாளர்கள் சார்பில், இவருக்கு இரங்கல் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான எழுத்தாளர்கள் கலந்து கொண்டு, மறைந்த பிரபல கரிசல் இலக்கிய எழுத்தாளர் பா. செயப்பிரகாசத்துடனான நட்பு பற்றியும், அனுபவங்கள் பற்றியும் கூறி தங்களது இரங்கலை தெரிவித்தனர்.
மேலும், எழுத்தாளர் பா. செயப்பிரகாசம் தனது உடலை தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரிக்கு தானம் செய்துள்ளார். அதன்படி, அவரது கடைசி ஆசையை நிறைவேற்றும் பொருட்டு எழுத்தாளரின் குடும்பத்தினரால் அவரது உடல் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட்டது. அப்போது அவரது மகன் தீபன் உட்பட குடும்பத்தினர், சக எழுத்தாளர்கள் அனைவரும் கதறி அழுத காட்சிகள் காண்போரை கலங்கச்செய்தது.
(மறைந்த முற்போக்கு எழுத்தாளரின் உடலை கொண்டு செல்லும்போது, சக எழுத்தாளர்கள் பா. செயப்பிரகாசத்தின் உடலுக்கு வீரவணக்கம் செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. )
அதேபோல்.
எழுத்தாளர் பா. செயப்பிரகாசம் மறைந்த செய்தியை அறிந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தொலைபேசி வாயிலாக இவரின் குடும்பத்தினரிடம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். அதேபோல் இவரின் உடலுக்கு பல்வேறு எழுத்தாளர்கள், அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் மாலை அணிவித்து இறுதி மரியாதை செலுத்தினர்.
(இவர் தனது மாணவப் பருவத்திலேயே 1965 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்றதால், இந்தியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் 3 மாதங்கள் இருந்துள்ளார். )
"மன ஓசை" என்ற கலை இலக்கிய மாத இதழின் பொறுப்பாசிரியராகவும் இருந்துள்ளார்.
(இவரின் படைப்புகள் சில;)
கவிதைகள்: சமத்துவ தீர வாசம், விதைகள் உறங்குவதில்லை, மக்களே போல் மரணத்துள் வாழ்வு, அழகின் சிரிப்பு, எழுதிய கை.
கதைகள்: அவர்களை கைது செய், விஷக்கடி, குடிபெயர்வு, மகன், தடயம்,.
கட்டுரைகள்: மணல், பள்ளிக்கூடம் நாவல் ஏற்புரை, கிராம வாழ்வை படைப்பின் ஆதாரம், இனப்படுகொலை: தமிழ் ஈழமும் - இந்தியாவின் பாதுகாப்பும். உள்ளிட்ட பல்வேறு படைப்புகளை படைத்துள்ளார்.