குறைவான மீன்களுடன் கரை திரும்பிய நாட்டுப்படகு மீனவர்கள் கவலை

67பார்த்தது
தூத்துக்குடி புதிய துறைமுக கடற்கரை பகுதியில் இருந்து 200-க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் மூலம் சுமார் 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் அதிகாலையில் மீன்பிடிக்க கடலுக்கு சென்று விட்டு சுமார் காலை 9 மணியளவில் கரைக்கு திரும்புவர்.

இவர்களின் வலையில் அதிகளவு சாளை மற்றும் சூடை, பாறை, விளைமீன் உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்கள் கிடைக்கும். இவர்கள் கடல் பகுதியில் குறைவான தூரத்தில் சென்று மீன்கள் பிடித்து வருவதால் மீன்களை ஐஸ் வைத்து பதப்படுத்தாமல் உடனடியாக பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு கடற்கரையிலேயே விற்பனை செய்கின்றனர்.

எனவே புதிய துறைமுக கடற்கரை பகுதியில் கிடைக்கும் மீன்கள் புதிதாக இருப்பதால் பொதுமக்கள் அதிக அளவு விரும்பி வந்து இந்த மீன்களை வாங்கி செல்கின்றனர். இந்த பகுதி மீனவர்களுக்கு வழக்கமாக சுமார் 2 டன் வரை மீன்கள் கிடைக்கும். ஆனால் தற்போது கடல் பகுதியில் பெய்து வரும் மழை மற்றும் வானிலை மாற்றம் காரணமாக குறைந்த அளவு மீன்களே இவர்களுக்கு கிடைத்து வருகிறது.

இவ்வாறு கிடைக்கும் மீன்களை வாங்க அதிகமான வியாபாரிகள் வராத காரணத்தினாலும், கடந்த ஒரு வார காலமாக கந்தசஷ்டி திருவிழா காரணமாகவும் மீன்களுக்கு நல்ல விலை இல்லாத நிலை இருந்து வருகிறது. இதனால் இங்குள்ள மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி