அளவுக்கு அதிகமாக மது குடித்தவர் மரணம்

70பார்த்தது
அளவுக்கு அதிகமாக மது குடித்தவர் மரணம்
தூத்துக்குடியில் அளவுக்கு அதிகமாக மது குடித்த (58) வயது நபர் படுக்கை அறையில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி பூபால் ராயர் புரத்தைச் சேர்ந்தவர் சுடலை மகன் யாகப்பன் சகாயராஜ் (58), கூலி வேலை செய்து வந்தார். இவரது மனைவி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் பிரிந்து சென்றுவிட்டார். இதனால் அவர் மது பழக்கத்திற்கு ஆளானார்.

இந்நிலையில், நேற்று இரவு அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டு வந்து வீட்டின் படுக்கை அறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த வடபாகம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி