லெஜெண்ட் சரவணன் நற்பணி மன்றம்; நிவாரணப் பொருட்கள் வழங்கல்

1927பார்த்தது
லெஜெண்ட் சரவணன் நற்பணி மன்றம்; நிவாரணப் பொருட்கள் வழங்கல்
தூத்துக்குடி மாவட்ட லெஜெண்ட் சரவணன் நற்பணி மன்றம் சார்பில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17 18 ஆகிய இரு தினங்கள் பெய்த கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மழை வெள்ளம் குளம் போல் தேங்கியது இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தூத்துக்குடி மாவட்ட தலைவர் லெஜென்ட் முத்துதுரை தலைமையில், மாவட்டத் துணைத் தலைவர் சரண்ஜி, மாவட்ட செயலாளர் மணி, மாவட்ட பொருளாளர் விவேக், மாவட்டத் துணைச் செயலாளர் விக்னேஷ், மாவட்ட துணை பொருளாளர் ராம், தலைமை குழு உறுப்பினர் வசந்த் மற்றும் மாவட்ட மகளிர் அணி உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து நிவாரணப் பொருட்களை வழங்கினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி