சிசிடிவி கேமராக்கள் சமூக விரோதிகள் அடித்து உடைப்பு;

79பார்த்தது
தூத்துக்குடியில் உள்ள வள்ளிநாயகபுரம் பகுதியில் நான்காவது மற்றும் ஐந்தாவது தெருவில் நடிகர் கார்த்தி ரசிகர் மன்றம் சார்பில் 50 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, வள்ளிநாயகபுரம் பகுதியில் இரவு நேரங்களில் பயங்கர ஆயுதங்களுடன் சமூக விரோதிகள் சுற்றி திரிவதாலும், தொடர்ந்து பெண்களை அச்சுறுத்தும் செயல்களில் சிலர் ஈடுபட்டு வந்ததாகவும், அப்பகுதியில் போதை புழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததாகவும் தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தது.

இந்நிலையில் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி கார்த்தி ரசிகர் மன்றம் சார்பாக வைக்கப்பட்ட சிசிடிவி கேமராக்களை சிலர் அடித்து நொறுக்கி சேதப்படுத்தி உள்ளனர்.

நேற்று காலையில் வள்ளிநாயகபுரம் 5வது தெருவில் புதிதாக 6 சிசிடிவி கேமராக்கள் வைக்கப்பட்டது.

கேமரா வைக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே சமூக விரோதிகள் சிலர் கம்பு மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் வந்து சிசிடிவி கேமராக்களை உடைத்து எறிந்துள்ளனர்.
இக்காட்சிகள் அனைத்தும் CCTV கேமராவில் பதிவாகியுள்ளது.

இது குறித்து அப்பகுதி மக்கள் தூத்துக்குடி தென் பாகம் காவல் நிலையத்தில் இன்று நேரடியாக சென்று புகார் அளித்தனர்.

இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்துள்ளனர்.

மேலும் சிசிடிவி கேமரா உடைக்கப்பட்ட சம்பவத்தால் அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தில் உள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி