தூத்துக்குடி சூரசம்ஹாரம் விழா; 4ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு: எஸ்பி ஆய்வு

75பார்த்தது
தூத்துக்குடி சூரசம்ஹாரம் விழா; 4ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு: எஸ்பி ஆய்வு
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா கடந்த 03. 10. 2024 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி 12. 10. 2024 வரை நடைபெறவுள்ளது. கடந்த 03. 10. 2024 அன்று தசரா திருவிழாவின் முதல் நாள் கொடியேற்ற நிகழ்வின்போது சுமார் 850 காவல்துறையினர் பாதுகாப்பு பணிக்கு அமர்த்தப்பட்டு இருந்தனர்.

3 லட்சத்திற்கும் அதிமாக பக்தர்கள் கலந்து கொண்ட இந்த கொடியேற்ற நிகழ்ச்சி காவல்துறையினரின் முன்னேற்பாடுகளால் அமைதியான முறையில் நடந்து முடிந்தது. இந்நிலையில் 03. 10. 2024 அன்று கொடியேற்ற நிகழ்வின்போது 3 லட்சத்திற்கும் மேற்ப்பட்ட பக்தர்கள் வந்தபோது எடுக்கப்பட்ட வீடியோவை, தற்போதும் தசரா திருவிழாவிற்கு தினசரி பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் வருவது போல் சமூக வலைதளங்களில் பரவி வருவதற்கு மாவட்ட காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.

மேலும் 12. 10. 2024 அன்று நடைபெறும் சூரசம்காரம் நிகழ்விற்கு சுமார் 4000 காவல்துறையினர் பாதுகாப்பு பணிக்கு ஈடுபடுத்தப்பட உள்ளனர். அதன் முன்னேற்பாடுகளாக கோவில் வளாகம் மற்றும் அதனை சுற்றியுள்ள சுமார் 50 க்கும் மேற்பட்ட பகுதிகளில் மொத்தம் 250-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை பொருத்தி பக்தர்களின் பாதுகாப்பை மேம்படுத்தப்பட்டுள்ளது, என தூத்துக்குடி மாவட்ட காவல்துறை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி