மீன்களுக்கு நல்ல விலை; மீனவர்கள் மகிழ்ச்சி!

55பார்த்தது
தூத்துக்குடி விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாததால் திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்தில் மீன்களை வாங்க பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கூட்டம் அலைமோதியது மீன்களுக்கு நல்ல விலை கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்ச்சி


மீன்பிடி தடைக்காலம் காரணமாக விசைப்படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை இதன் காரணமாக இன்று சனிக்கிழமை என்பதால் திரேஸ்புரம் நாட்டு படகு மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற ஏராளமான நாட்டுப் படகுகள் கரை திரும்பின இதன் காரணமாக மீன்களின் வரத்து அதிகமாக காணப்பட்டது


இன்று காலை முதலே தினேஷ் திரேஷ் புரம் நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்தில் மீன்களை வாங்க பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கூட்டம் அலைமோதியது இதன் காரணமாக மீன்களின் விலை உயர்ந்து காணப்பட்டது


சீலா மீன் ஒரு கிலோ 1200 ரூபாய் வரையும் விளை மீன் கிலோ 500 ரூபாய் வரையும் ஊலி கிலோ 500 ரூபாய் வரையும் பாறை கிலோ 400 ரூபாய் வரையும் அயிலேஷ் கிலோ 300 ரூபாய் வரையும் கேரை மற்றும் சூரை கிலோ 200 முதல் 250 ரூபாய் வரையும் விற்பனையானது மீன்களுக்கு நல்ல விலை கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்

தொடர்புடைய செய்தி