தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் நுழைவு வாயிலை மறைத்து நிற்கும் மினிபஸ்களால் போக்குவரத்து இடையூறு ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தூத்துக்குடியில் பழைய பேருந்து நிலையம் என்று அழைக்கப்படும் அண்ணா பேருந்து நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ. 57 கோடி மதிப்பில் பேருந்து நிலையம புதுப்பிக்கப்பட்டு கட்டப்பட்டுள்ளது. இங்கிருந்து திருச்செந்தூர், நெல்லை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. தினசரி ஆயிரக் கணக்கான பயணிகள் பேருந்து நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த பேருந்து நிலையத்தில் மினிபஸ்களும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பேருந்து நிலையத்தின் நுழைவு வாயிலில் மினிபஸ்கள் பாதி அளவு மறைத்து நிறுத்துவதால் பேருந்துகள் உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.