மத்திய பாஜக அரசைக் கண்டித்து தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

54பார்த்தது
மத்திய பாஜக அரசைக் கண்டித்து தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்
மத்திய பாஜக அரசைக் கண்டித்து தூத்துக்குடியில் அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மூன்றாவது முறையாக பொறுப்பேற்றுள்ள பெரும்பான்மை இல்லாத பாஜக புதிய தொழிலாளர் விரோத சட்டத் தொகுப்புகள் நான்கையும் திரும்ப பெற வேண்டும். விவசாயிகளின் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்க வேண்டும். தொழிற்சங்கங்கள் முன்வைத்த கோரிக்கைகளை மத்திய அரசின் பட்ஜெட்டில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி தூத்துக்குடி அண்ணாநகரில் அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் ஏஐடியுசி சார்பில் மாவட்டத் தலைவர் கிருஷ்ணராஜ், சிஐடியு சார்பில் மாநில செயலாளர் ரசல், மாவட்ட தலைவர் பேச்சிமுத்து, ஐஎன்டியுசி சார்பில் கதிர்வேல் ராஜ் சுடலை பாலகிருஷ்ணன், எல்பிஎஃப் சார்பில் மாவட்ட கவுன்சில் தலைவர் சுசி ரவீந்திரன், சந்திரசேகர், ஹஎச்எம்எஸ் துறைமுகம் சத்யா, கவுன்சி தலைவர் ராஜ்குமார், உழைப்பாளர் சங்க மாவட்ட தலைவர் ராஜலட்சுமி, ஏஐசிசிடியு சார்பில் சிவராமன் மற்றும் அனைத்து சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி