புதிய சாலையை தோண்டி பார்த்த ஆட்சியர்: அதிகாரிகள் அதிர்ச்சி!

74பார்த்தது
ஏரல் அருகே குரங்கணி பகுதியில் புதிதாக போடப்பட்ட சாலையை மாவட்ட ஆட்சியர் சுமார் ஒரு அடி தூரம் வரைக்கும் தோண்டி ஆய்வு செய்தார்.

உங்களைத் தேடி உங்கள் ஊரில்" திட்டத்தில் ஏரல் வட்டம், திருவைகுண்டம் ஊராட்சி ஒன்றியம், நட்டாத்தி ஊராட்சி நூலகம், நட்டாத்தி ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்டு வரும் நியாய விலை கடை கட்டுமானப் பணிகள், நட்டாத்தி ஊராட்சி கொம்புக்காரன் பொட்டல் கிராமத்தில் கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளத்தால் சேதம் அடைந்த வீடுகளை ஊரக வளர்ச்சித்துறை மூலம் தற்பொழுது புதிதாக கட்டப்பட்டு வருவதையும், நட்டாத்தி ஊராட்சி கொம்புக்காரன் பொட்டல் கிராமத்தில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் கட்டப்பட்டு வரும் வீட்டின் கட்டுமானப் பணிகளை பார்வையிட்டார்.

அதனைத்தொடர்ந்து, பெருங்குளம் பேரூராட்சி உண்டியலூர் வடக்கு தெருவில் கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளத்தால் சேதமடைந்த வீடு தற்பொழுது புதிதாக கட்டப்பட்டு வருவதையும், உண்டியலூர் வடக்கு தெருவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேவர் பிளாக் சாலையை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின், ஏரல் ஆற்றுப்பாலம் கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் சேதமடைந்து தற்பொழுது நெடுஞ்சாலைத்துறை மூலம் கட்டப்பட்டு வருவதையும், ஊரக வளர்ச்சித்துறை மூலம் புதிதாக அமைக்கப்பட்டுள்ள குரங்கணி புறவழிச்சாலையின் தரம் குறித்து ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்புடைய செய்தி