இந்தியாவின் கடல்சார் வளர்ச்சியில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் தருணத்தைக் குறிக்கும் வகையில், கேரளாவில் ரூ.8,800 கோடி மதிப்பிலான விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தை பிரதமர் நரேந்திர மோடி, கடந்த மே 2, 2025 அன்று திறந்து வைத்தார். ஆழ்கடல், உலகத் தரம் வாய்ந்த கப்பல் போக்குவரத்து மையமாக வடிவமைக்கப்பட்ட இந்த துறைமுகம், இந்தியாவின் வர்த்தக திறனை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.