கடந்த 1998ம் ஆண்டு மே மாதம் 10ம் தேதி மும்பையில் முதல் முதலாக உலகளாவிய சிரிப்பு யோகா இயக்கத்தின் நிறுவனர் மருத்துவர் மதன் கட்டாரியா சிரிப்பு தின கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். இதுவே பின்னாளில் ஒவ்வொரு ஆண்டின் மே மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை சிரிப்பு தினமாக கொண்டாட காரணமாக அமைந்தது. அனைவரும் மனம்விட்டு சிரிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் உலக சிரிப்பு தினம் கொண்டாடப்படுகிறது.