தமிழ்நாட்டில் இன்று (மே.04) 10 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது. அக்னி நட்சத்திரம் என்று சொல்லக்கூடிய கத்தரி வெயில் இன்று தொடங்கியது. இந்நிலையில், வேலூர் 106 டிகிரி, திருச்சி, மதுரை விமான நிலையம் தலா 105 டிகிரி, ஈரோடு, திருத்தணி, கரூர் பரமத்தியில் தலா 104 டிகிரி, மீனம்பாக்கம் சேலம் தலா 103 டிகிரி, நுங்கம்பாக்கம் 102 டிகிரி, பாளையங்கோட்டை 100 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது.