காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாம்!

53பார்த்தது
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு வெளிமான் சரணாலயத்தில் நடைபெற்ற அரசு பள்ளி மாணவ மாணவியருக்கான வனவிலங்குகளை பாதுகாப்பது மரங்களை வளர்ப்பது மற்றும் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாம்


தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில் அமைந்துள்ள வெளிமான் சரணாலயத்தில் வைத்து சுற்றுச்சூழல் மற்றும் கால நிலை மாற்றத்துறை மற்றும் வனத்துறை சார்பில் அரசு பள்ளி மாணவ மாணவருக்கான காலநிலை மாற்றம் குறித்த இயற்கை விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடத்தப்பட்டது

வல்லநாடு வெளிமான் சரணாலயத்தில் பயிற்சி மேற்கொண்ட மாணவ மாணவியருக்கு வல்லநாடு வெளிமான் சரணாலயத்தில் அமைந்துள்ள மான்களின் வகைகள் மற்றும் தாவரங்களின் வகைகள் கால நிலை மாற்றத்தை தடுக்க மாணவர்களின் கடமையாக மரங்களை வளர்த்து பாதுகாக்க வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது

மேலும் மாணவ மாணவியருக்கு ஓவியம் மற்றும் வினாடி வினா போட்டி நடத்தப்பட்டது இந்த போட்டியில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி கலந்து கொண்டு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார் மேலும் காலநிலை மாற்றத்தினால் உலக அளவில் பல்வேறு பேரிடர்கள் அதாவது அதிக அளவு மழை அதிக அளவு வெப்பம் ஆகியவை உருவாகிறது இதை தவிர்க்க மாணவர் சமுதாய முன் வந்து மரம் வளர்ப்பது குறித்த முக்கியத்துவத்தை அறிந்து மரம் வளர்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்

தொடர்புடைய செய்தி