பன்னம்பாறை அரசு உயா்நிலைப்பள்ளியில் டெங்கு விழிப்புணா்வு

71பார்த்தது
பன்னம்பாறை அரசு உயா்நிலைப்பள்ளியில் டெங்கு விழிப்புணா்வு
தூத்துக்குடி மாவட்டம் பன்னம்பாறை அரசு உயா்நிலைப்பள்ளியில் டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பள்ளியின் (பொறுப்பு) தலைமையாசிரியா் ரூபா தலைமை வகித்தாா். ட்டார சுகாதார மேற்பாா்வையாளா் பால் ஆபிரகாம், கொசுப்புழு உற்பத்தியாகும் விதம், அதனை அழிக்கும் முறைகள், டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மாணவ- மாணவியா் ஒத்துழைப்பு தருவதன் அவசியம் குறித்து பேசினாா். இதில், சுகாதார ஆய்வாளா்கள் ஜெயபால், கிறிஸ்டோபா் செல்வதாஸ், மந்திரராஜன், ராமசுதன், அகிலன் ஆகியோா் கலந்து கொண்டு விழிப்புணா்வு ஏற்படுத்தினா். இறுதியில் அனைவரும் டெங்கு தடுப்பு உறுதிமொழி ஏற்றனா். "

தொடர்புடைய செய்தி