கே. வேலாயுதபுரத்தில் காவல்துறை சார்பில் மாற்றத்தை தேடி விழிப்புணர்வு நிகழ்ச்சி- காவல் ஆய்வாளர் ராஜ் தலைமையில் நடைபெற்றது
ஓட்டப்பிடாரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கே. வேலாயுதபுரம் கிராமத்தில் , ஓட்டப்பிடாரம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜ் தலைமையில் மாற்றத்தை தேடி விழிப்புணர்வு நிகழ்ச்சி பிப்ரவரி 20 செவ்வாய்க்கிழமையான இன்று மாலை 5 மணி அளவில் நடைபெற்றது. அப்போது
பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் தொடர்பாகவும், மக்கள் சட்டத்தை மதித்து நடக்க வேண்டும் எந்த சூழ்நிலையிலும் பொறுமைகளை கடைபிடித்து சிந்தித்து நடக்க வேண்டும் என்றும் சாலை விதிகளை பின்பற்ற வேண்டும் என்றும் புகையிலை பொருட்கள் பற்றிய பாதிப்புகளையும், குழந்தைகளின் நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும் என்றும், குழந்தைகளுக்கு நல்லொழுக்கங்களை கற்றுக் கொடுக்க வேண்டும் என பல்வேறு அறிவுரைகளை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.