தூத்துக்குடி மாவட்டத்தில் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்புத் திட்டம்-பயறுவகை 2024-25ம் ஆண்டில் செயல்படுத்திட ரூ. 3. 3 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் பயறு வகைப் பயிர்களான உளுந்து மற்றும் பாசி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு செயல் விளக்கத் திடல் அமைத்திட ஒரு ஹெக்டேருக்கு ரூ. 8500 மானியத்தில் இடுபொருட்கள், உளுந்தில் மக்காசோளம் ஊடுபயிர் செயல் விளக்கத் திடல் அமைத்திட ஒரு ஹெக்டேருக்கு ரூ. 8500 மானியத்தில் இடுபொருட்கள், உயர் விளைச்சல் ரக விதை விநியோகத்திற்கு ஒரு கிலோவிற்கு ரூ. 50 மானியம், உயர் விளைச்சல் ரக விதை உற்பத்தி ஊக்கத்தொகை ஒரு கிலோவிற்கு கூடுதலாக ரூ. 25, நுண்ணூட்ட உரங்கள், உயிர் உரங்கள் ஆகியவை 50 சதவீதம் மானியத்தில் வழங்கப்படுகிறது.
உயிரியியல் பயிர் பாதுகாப்பு மருந்துகளுக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ. 500 மானியம், இலை வழி தெளிப்பு உரத்திற்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ. 2000 மானியமாக வழங்கப்பட உள்ளது. விவசாயிகள் தங்கள் வயல்களில் தரமான விதை உற்பத்தி செய்து அரசுக்கு வழங்கிட கூடுதலாக கிலோவிற்கு ரூ. 25 ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. ஆதிதிராவிட பழங்குடியின விவசாயிகள் விதை உற்பத்தியில் ஈடுபட அழைக்கப்படுகிறார்கள். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.