திருவாரூர் அருகே நீலக்குடியில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நாளைய தினம் நடைபெற உள்ளது.
இதில் நாட்டின் ஜனாதிபதி திரௌபதி முர்மு பங்கேற்று மாணவ மாணவியருக்கு பட்டங்களை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற இருந்தது தற்போது தமிழ்நாட்டில் நிலவிவரும் தீவிர மழை, புயல் போன்ற காரணத்தால் ஜனாதிபதியின் பாதுகாப்பு கருதி அவர் வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது.