மன்னார்குடி அருகே திருப்பாலைக்குடியில் உள்ள பழமையான முருகன் கோவிலில் தைப்பூசத்தை ஒட்டி நேற்று காவடி மற்றும் பால்குட திருவிழா நடைபெற்றது பல்வேறு கிராமங்களில்ச் சேர்ந்த பக்தர்கள் பால்குடம் மற்றும் காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் முருகனுக்கு பாலபிஷேகம் செய்யப்பட்டு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார் விழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற சுவாமி தரிசனம் செய்தனர்.