ஆலங்குடியில் குரு பெயர்ச்சி விழா - ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

80பார்த்தது
ஆலங்குடி குரு பரிகார தலத்தில் குரு பெயர்ச்சி விழா. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

குருபரிகார தலமாக விளங்கும் வரலாற்று சிறப்பு மிக்க திருவாரூர் மாவட்டம், ஆலங்குடி அருள்மிகு ஆபத்சகாயேசுவரர் ஆலயத்தில் குரு பெயர்ச்சி விழா நடைபெற்றது. நவக்கிரகக்களில் நன்மையை தரக்கூடிய, சுபகிரகம் குருபகவான். வருடத்திற்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடப்பெயர்ச்சி்ஆவார். இந்த ஆண்டு மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு நேற்று மாலை 5.19 மணிக்கு குரு பகவான் பெயர்ச்சி அடைந்தார்.

குரு பகவானுக்கு தங்க கவசம் அணிவித்துவண்ணமலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அலங்காரதீபம், பஞ்சாரத்தி தீபங்கள் காட்டப்பட்டு பூஜைகள் நடைப்பெற்றன. இதில் ஆயிரக்கணக்கானோர் நீண்ட வரிசையில் நின்று குருபகவானை வழிப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி