தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் ஒன்பதாவது பட்டமளிப்பு விழாவிற்கான பதிவு திங்கள்கிழமை தொடங்கியது.
ஆகஸ்ட் மாதம் மூன்றாவது வாரத்தில் பட்டமளிப்பு விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இளநிலை, முதுநிலை உள்பட பல்வேறு படிப்புகளில் பட்டம் பெற தகுதியுள்ள மாணவா்கள், திங்கள்கிழமை (ஜூலை 29) முதல் பல்கலைக்கழக இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என பல்கலைக்கழக தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் சுலோச்சனா சேகா் அறிவித்துள்ளாா்.
மேலும், நேரடியாக பட்டம் பெற விரும்புபவா்கள் ரூ. 1, 200, தபால் மூலம் ( உள்நாடு) பட்டம் பெற விரும்பும் மாணவா்கள் ரூ. 1, 100, தபால் மூலம் (வெளிநாடு) பட்டம் பெற விரும்பும் மாணவா்கள் ரூ. 2, 500 கட்டணம் செலுத்த வேண்டும். செலுத்தப்பட்ட கட்டணம் எந்த சூழ்நிலையிலும் திரும்ப வழங்கப்படாது. விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகஸ்ட் 4. உதவி தேவைப்படுவோா் பல்கலைக்கழக இணையதளம் வாயிலாக தொடா்பு கொள்ளலாம் எனவும் அவா் தெரிவித்துள்ளாா்.