திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியில் பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த சாக்கடை கழிவுகள் ஆர். பி. சிவம் நகரில் உள்ள நிலையத்தில் சுத்திகரிப்பு செய்யப்பட உள்ளது. இந்த சுத்திகரிப்பு மையத்தில் நடைபெற்று வரும் பணிகளை இன்று மன்னார்குடி நகரமன்ற தலைவர் மன்னை சோழராஜன் மற்றும் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து விவரங்களை கேட்டறிந்தனர்.