மன்னையில் அம்பேத்கர் சிலைக்கு வேலூர் இப்ராஹிம் மரியாதை

73பார்த்தது
அம்பேத்கர் 135-வது பிறந்தநாளை முன்னிட்டு மன்னார்குடியில் பாஜகவின் சிறுபான்மையினர் பிரிவின் தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். அம்பேத்கர் 135-வது பிறந்த நாளை ஒட்டி திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தங்கமணி கட்டிடம் அருகே உள்ள அம்பேத்கர் சிலைக்கு பாஜகவின் சிறுபான்மையினர் பிரிவின் தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் மாலை அணிவித்து மரியாதை செய்தார். இந்த நிகழ்வில் மாவட்ட தலைவர் செல்வம், மன்னார்குடி ஒன்றிய தலைவர் கே.என்.செல்வம், நகர தலைவர் வினோத், முன்னாள் மாவட்ட தலைவர்கள் சி.எஸ்.கண்ணன், சிவ.காமராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி