மன்னார்குடியில் லாரி மோதியதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
திருவாரூர் மாவட்டம் வடபாதி மங்கலத்தில் இருந்து மன்னார்குடி திருவாரூர் சாலையில் ராஜாராஜன் மாரிமுத்து இருவரும் இருசக்ர வாகனத்தில் மன்னார்குடி நோக்கி வந்துள்ளனர். அப்போது மன்னார்குடி வழியாக ஜல்லி ஏற்றி வந்த லாரி ஐயர் சம்மாது என்னும் இடத்தில் வந்த போது எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் மீது விபத்துக்குள்ளானது. விபத்தில் ராஜராஜன், மாரிமுத்து இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர் விபத்து குறித்து மன்னார்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்தவர்களின் உடல் மீட்க பட்டு மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.