மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவில் வேடுபறி விழா

78பார்த்தது
மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி ராஜகோபால சாமி குதிரை வாகனத்தில் எழுந்தருளி வேடுபறி நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள ராஜகோபாலசாமி கோவில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி பகல்பத்து ராபத்து உற்சவம் நடைபெற்று வருகிறது. நேற்று இரவு நடைபெற்ற ராபத்து உற்சவத்தின் 8 ஆம் நாள் நிகழ்ச்சியில் ராஜகோபால சாமி தங்க குதிரை வாகனத்தில் சொர்க்க வாசல் வழியாக எழுந்தருளி கோவிலின் நான்கு வீதிகள் வழியாக வளம்வந்தார். பின்னர் நடைபெற்ற வேடுபறி நிகழ்ச்சியில் பெருமாளிடம் திருமங்கை மன்னன் வழிப்பறி செய்யும் நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

டேக்ஸ் :