சியாமலா தேவி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

65பார்த்தது
மன்னார்குடி பந்தலடி கீழ் புறம் அமைந்துள்ள சியாமளாதேவி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோளாகலமாக நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பந்தலடி கீழராஜ வீதியில் அமைந்துள்ள சியாமலா தேவி அம்மன் கோவில் திருப்பணிகள் நடைபெற்று முடிந்த நிலையில் கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டது. கோவிலுக்கு எதிரே யாகசாலை அமைக்கப்பட்டு கடந்த ஞாயிற்று கிழமை முதல் பூஜைகள் தொடங்கி நடைபெற்று வந்தது. இன்று காலை 7மணிக்கு இரண்டாம் கால யாக பூஜையும் அதனை தொடர்ந்து காலை 9மணிக்கு மகா பூரணா ஹுதியும் மகா தீபாரதனை நடைபெற்று சிவாச்சரியர்கள் கலசங்களை சுமந்து கோவிலை வளம்வந்தனர். பின்னர் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி