காஞ்சிபுரம் மாவட்டம் காரப்பேட்டையில் உள்ள மீனாட்சி மருத்துவக் கல்லூரியில் படிக்கும் மாணவி, தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஷர்மி என்ற மாணவி கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், மருத்துவக்கல்லூரியின் 5-வது மாடியில் இருந்து அவர் குதித்துள்ளார். படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.