தன் மீது வழக்கு தொடர ஆளுநர் வழங்கிய அனுமதி உத்தரவை ரத்து செய்யக்கோரி நீதிமன்றத்தில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று (செப்.2) நீதிபதி நாகபிரசன்னா முன் விசாரணைக்கு வருகிறது. சித்தராமையா வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி ஆஜராகி, மீண்டும் சில வாதங்களை எடுத்து வைக்கிறார். அதைத்தொடர்ந்து இந்த வழக்கின் மீதான தீர்ப்பை நீதிபதி ஒத்திவைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஓரிரு நாளில் தீர்ப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது.