கட்சியில் உழைப்பவர்களுக்கு மிக விரைவில் பதவிகள் அளிக்கப்படும் என தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவித்துள்ளார். தவெக ஆலோசனைக் கூட்டத்தில் உரையாற்றிய புஸ்ஸி ஆனந்த், "தளபதியின் அறிவுறுத்தலின்படி கட்சியில் உழைப்பவர்களுக்கு மிக விரைவில் பதவிகள் வழங்கப்படும். கீழ் மட்டத்தில் இருந்து மேல் மட்டம் வரையில் பதவிகள் வழங்கப்பட இருக்கிறது. நம் தலைவரை முதலமைச்சர் இருக்கையில் அமர வைப்பதற்கு நாம் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.