ஆந்திரா: விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவி, தனது காதலன் வம்சியுடன் உல்லாசமாக இருந்த அந்தரங்க காட்சிகளை அவர்களது நண்பர்கள் 3 பேர் வீடியோ எடுத்துள்ளனர். அந்த வீடியோவை காட்டி மிரட்டி அந்த மாணவியை பல மாதம் கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். இதற்கு காதலன் வம்சியும் உடந்தையாக இருந்துள்ளார். இதைத்தொடர்ந்து, மனவேதனையில் இருந்த மாணவி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து, பெற்றோர்களால் காப்பற்றப்பட்ட மாணவி அளித்த புகாரின் பேரில், 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.