

திருவள்ளூர்: முதல்வர் பங்கேற்கும் விழா மேடையினை அமைச்சர்.. கலெக்டர் ஆய்வு
திருவள்ளூர் மாவட்டம் ஆண்டார்குப்பம் பெருஞ்சேரியில் நாளை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அரசு சார்பில் 2 லட்சத்து 2 ஆயிரத்து 538 (202538) பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளதாகவும், பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான 63 ஆயிரம் பட்டாக்களை வழங்க உள்ளதாகவும், பல்வேறு துறை சார்பில் நடைபெற உள்ள திட்டங்களை துவக்கி வைக்க உள்ளதாகவும் விழா மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியருடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த பின்னர் அமைச்சர் சாமு நாசர் தெரிவித்தார். முதல்வர் பங்கேற்கும் விழாவிற்கு 400 பேருந்துகள் மூலம் நலத்திட்ட உதவிகள் பெறும் பயனாளிகளை நிகழ்ச்சிக்கு அழைத்து வர உள்ளதாகவும், திருத்தணி பள்ளிப்பட்டு ஆர்கே பேட்டை தொலைதூரத்தில் உள்ளவர்களை இரவே வரவழைத்து தங்க வைக்கப்படுவார்கள், கழிப்பிடம், குடிநீர் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப் தெரிவித்துள்ளார். நாளை முதல்வர் விழா நடைபெறும் போது போக்குவரத்து நெரிசல் மற்றும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தேவையான பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் ஆவடி காவல் ஆணையர் சங்கர் தெரிவித்துள்ளார். ஆய்வின்போது பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல அரசுத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.