ஆரணி: அதிக மண் ஏற்றிய லாரி தலைக் குப்புற கவிழ்ந்து விபத்து

69பார்த்தது
திருவள்ளூர்

சவுடு மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக மண் ஏற்றி கொண்டு சென்ற லாரி தலை குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்ப்பு


திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள அரியபாக்கம் கிராமத்தில் உள்ள ஏரியில் அரசு சவுடு
மண் குவாரி செயல்பட்டு வருகிறது இதில் நாள்தோறும் அளவுக்கு அதிகமாக சவுடு மண் லாரிகளில் விதிமுறைகளை மீறி அள்ளப்பட்டு கொண்டு செல்லப்படுகிறது
இந்த நிலையில் சவுடு மண் லாரி பெரியபாளையம் சாலையில் நிலைத்தடுமாறி தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது இதில் லாரி ஓட்டுனர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் லாரியில் இருந்த மண்ணை அகற்றி போக்குவரத்து இடையூறு ஏற்படாமல் அங்கு இருந்து டிப்பர் லாரி அப்புறப்படுத்தும் பணியை மேற்கொண்டனர் அப்பகுதியில் தொடர்ந்து தார்பாய் கட்டாமல் கூடுதல் பாரம் ஏற்றி செல்வதால் தூசி பரவி மண் சாலைகளில் கொட்டி அடிக்கடி விபத்துகள்
ஏற்படுவதாகவும் வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டினர் கனிமவளத்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் உரிய ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி