பொன்னேரியில் சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்றும் பொதுமக்களுக்கு அறுசுவை உணவும் வழங்கினர்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில்
டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு
திமுக அதிமுக உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் அதிமுக முன்னாள் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் பலராமன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். திமுக மாவட்ட கழக பொறுப்பாளர் எம்எஸ்கே ரமேஷ் ராஜ் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளில் அனைவரும் இணைந்து சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்று கொண்டு பொதுமக்களுக்கு அறுசுவை உணவு வழங்கி பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடினர்.