சாலையில் சென்ற ஆட்டோவின் முன் சக்கரம் கழன்று விபத்து

72பார்த்தது
திருவள்ளூரில் சாலையில் ஓடி கொண்டிருந்த ஆட்டோவின் முன் சக்கரம் கழன்று ஓடி விபத்து ஏற்பட்டது. நல்வாய்ப்பாக ஆட்டோவில் பயணித்த 4 பேர் உயிர் தப்பினர்கள்.

திருவள்ளூர் பகுதியை சேர்ந்த
கிருபாவதி என்பவர் தமது குடும்பத்துடன் பூண்டி அடுத்துள்ள பூதூர் பகுதியில் உள்ள தமது உறவினர் வீட்டிற்கு தன்னுடைய பேரன் , பேத்தி, மருமகளுடன், ஆட்டோவில் சென்று கொண்டிருந்த போது திருவள்ளூர் அடுத்த சிறுவானூர்கண்டிகை பகுதியில் திடீரென ஆட்டோவின் முன்பகுதி டயர் கழன்று ஓடியது. இதனை பார்த்து சுதாரித்த ஆட்டோ ஓட்டுநர் சாமர்த்தியமாக ஆட்டோவை நிறுத்தி உள்ளார். ஆட்டோ ஓட்டுனரின் இந்த செயலால் 4 பேர் உயிர் நல்வாய்ப்பாக தப்பினர். ஓட்டுநரின் இந்த செயல் அனைவரின் பாராட்டுதல்களை பெற்றுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி