திருவொற்றியூர்: தனியார் பள்ளியில் விஷ வாயுக் கசிவு

79பார்த்தது
திருவொற்றியூர், விக்டரி தனியார் மேல்நிலைப் பள்ளியில் கடந்த அக்டோபர் 25ம் தேதி, பள்ளி வளாகத்தில் விஷ வாயு கசிவு ஏற்பட்டதாக கூறி 35 பேர் வாந்தி, மயக்கம், மூச்சு திணறலால் பாதிக்கப்பட்டு, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
தொடர்ந்து, தனியார் பள்ளி வளாகத்தில், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் முகாமிட்டு, காற்றின் தரம் கண்காணிக்கும் இயந்திரங்களை கொண்டு ஆய்வு மேற்கொண்டனர். ஆனால், எதனால் பாதிப்பு கண்டறிய முடியவில்லை அதேநேரம், விஷ வாயு கசிவு குறித்து எந்தவொரு விளக்கமும் தராமல் பள்ளியை திறந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, பெற்றோர், பள்ளி நிர்வாகத்தினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் நேற்று வகுப்பு இடைவேளை நேரத்தில் திடீரென துர்நாற்றம் வீசியது அப்போது வகுப்பறையில் இருந்து வெளியே வந்த மாணவிகள் 8 பேர் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர். இதனால் மற்ற மாணவிகளும் அலறியடித்து வெளியே ஓடினர்.
மயக்கம் அடைந்த மாணவிகள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்
இதுகுறித்த தகவல் அறிந்து வந்த காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள், மீண்டும் இந்த பள்ளியில் ஆய்வு செய்தனர்.
நேற்று இரவு நான்கு மாணவிகள் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். நான்கு பேர் சிகிச்சையில் உள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி