சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் வீட்டில் நகை பணம் கொள்ளை

1043பார்த்தது
சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் வீட்டில் நகை பணம் கொள்ளை
சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் திரைப்பட ஸ்டண்ட் மாஸ்டர் வீட்டில் மூன்று லட்ச ரூபாய் பணம் 3 பவுன் நகை கொள்ளை போன சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

புது வண்ணாரப்பேட்டை தேசிங்கு நகரை சேர்ந்தவர் அன்பு என்ற அன்பழகன். வடசென்னை திரைப்படம் மூலம் பிரபலமான ஸ்டன்ட் மாஸ்டரான இவர் பல்வேறு திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சினிமா படப்பிடிப்பிற்காக புதுச்சேரிக்கு சென்று உள்ளவர் நேற்று அவரது குடும்பத்தினருடன் வீட்டை பூட்டிவிட்டு கோயிலுக்கு சென்று உள்ளனர்.

நேற்று இரவு வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு திறக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தவர் உடனடியாக உள்ளே சென்று பார்த்தபோது துணிகள் எல்லாம் சிதறி கிடந்து பீரோக்கள் திறக்கப்பட்டு பீரோவில் இருந்த மூன்று லட்சம் ரூபாய் இருக்கும் மூன்று பவுன் நகை காணாமல் போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்

உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த புதுவண்ணாரப்பேட்டை போலீசார் கைரேகை நிபுணர்களை வரவழைத்து சோதனை மேற்கொண்டு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி