திருவள்ளூர் அடுத்த பெரிய குப்பம் பகுதியில்
தமிழக வெற்றி கழகம் திருவள்ளூர் மேற்கு மாவட்டம் சார்பில் 1000ஆவது நாளில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி மற்றும் ஏழை எளிய மக்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது.
தமிழக கட்சி கழக தலைவர் தளபதி விஜய் மற்றும் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆகியோர்களின் வழிகாட்டுதலின்படி திருவள்ளூர் மேற்கு மாவட்ட தமிழக கட்சி கழகம் மாவட்ட தலைவர் பிரகாசம் என்கிற குட்டி தலைமையில் திருவள்ளூர் அடுத்த பெரியகுப்பம் பகுதியில் அமைந்துள்ள தமிழக வெற்றிக் கழக தலைமை அலுவலகத்தில்
தளபதி விலையில்லா விருந்தகத்தின் 1000 ஆவது நாளில் தூய்மை பணியாளர்களை கௌரவிக்கும் வகையில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது,
பின்னர் 200 க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு இனிப்பு வடை, பொங்கல், பூரி, இட்லி, உள்ளிட்ட காலை சிற்றுண்டியை தமிழக கட்சி கழக திருவள்ளூர் மேற்கு மாவட்ட தலைவர் பிரகாசம் என்கிற குட்டி வழங்கினார்,
மேலும்
கொரோனா காலகட்டத்தில் உணவின்றி தவித்த ஏழைகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்பொழுது இடையில்லா தொடர்ச்சியான 1000 நாட்கள் உணவு வழங்கி தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் அரசியல் கட்சியினருக்கு முன்னோடியாக விளங்கியுள்ளனர்