திருத்தணி வருவாய் ஆய்வாளர் அலுவலகம் வெளியில் இருந்த 30 வருடம் பழமையான மரத்தை வெட்டிய வருவாய் துறையினர்.
திருத்தணி- பிப்ரவரி-20
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சியில் வட்டாட்சியர் குடியிருப்பு அருகில் உள்ளது வருவாய் ஆய்வாளர் அலுவலகம் 30 வருடமாக செயல்பட்டு வருகிறது இந்த அலுவலகத்திற்கு வெளியில் கால்வாய் ஓரத்தில் 30 வருடம் கொடிகாப்புலி மரம் என்ற உயர்ரக மரம் இருந்தது இந்த மரத்தை எந்த ஒரு பகிரங்க ஏளமும் விடப்படாமலும், இடையூறு இல்லாமல் இருந்த இந்த மரத்தை 50 டன் மரக்கட்டைகளை இந்த மரத்திலிருந்து வெட்டி எடுத்துச் சென்ற செங்கல் சூளை வியாபாரிகள், இப்படி பழமையான மரங்களை தொந்தரவு இல்லாத காற்று கூட வீசி விழாத இந்த மரங்களை அலுவலகத்திற்கு வெளியில் இருந்த மரங்களை இப்படி வெட்டி எடுத்து உள்ளது நியாயமா இதுபோல் பழமையான மரங்களை உங்களால் பராமரிக்க முடியவில்லை இதுபோல் பழமையான மரங்களை ஏன் வெட்டுகிறீர்கள் வேறு இடங்களுக்கு இடம் மாற்றம் செய்திருக்கலாம் என்று இந்த பழமையான மரத்தை வெட்டியதற்கு பொதுமக்கள் பகிரங்க அதிருப்தி தெரிவித்துள்ளனர் வருவாய்த்துறையினர் மீது
அரசு வீட்டுக்கு ஒரு மரம் நடுவோம் என்று கூறுகிறார்கள் ஆனால் அரசு அலுவலகங்களில் மரத்தை பராமரிப்பதே இல்லை என்பது இதன் மூலம் நிதர்சன உண்மையாகி உள்ளது.