பால் கனகராஜ் செய்தியாளர் சந்திப்பு.

73பார்த்தது
திமுக சார்பில் தற்போதைய மக்களவை உறுப்பினரே மீண்டும் போட்டியிடும் நிலையில் திமுக , அதிமுக வேட்பாளர்களுடன் ஒப்பிடும்போது உங்களுக்கான வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில் ,

5 ஆண்டுகள் தொகுதிக்குள்ளே வராத கலாநிதி விராசாமியை திமுக வேட்பாளராக மீண்டும் அறிவித்தது தனக்கு மகிழ்ச்சி தருவதாகவும் , இலக்கே இல்லாமல் , திசை தெரியாத கப்பல் போல இருக்கும் அதிமுக வட சென்னையில் வெற்றி பெற முடியாது என்றும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர் , தொழிற்சாலைகளால் வடசென்னையின் சுற்றுச் சூழல் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் , வட சென்னை பகுதியில் சட்டத்தை மீறி செயல்படும் தொழிற் சாலைகளை நான் முடக்குவேன் என்றும் கடந்த முறை வெற்றி பெற்றவர் வாங்கிய வாக்குகளை விட 50 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று நான் வெற்றி பெறுவேன் என்றும் நம்பிக்கையுடன் கூறினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி