கூட்டம் குறைந்து காணப்பட்ட குன்றத்தூர் முருகன் கோவில்

65பார்த்தது
கூட்டம் குறைந்து காணப்பட்ட குன்றத்தூர் முருகன் கோவில்
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது குன்றின் மேல் அமைந்துள்ள இந்த கோவிலுக்கு தினந்தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்லும் நிலையில் ஆடி கிருத்திகை தினத்தை முன்னிட்டு பக்தர்கள் வருவார்கள் என்பதற்காக கோவில் நிர்வாகம் சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது 50 ரூபாய் 100 ரூபாய் கட்டண தரிசனம் செய்வதற்கும் முதியவர்கள் தனியாக செல்வதற்கும் சிறப்பு வரிசைகள் அமைக்கப்பட்டு இருந்தது கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை சற்று குறைந்தது பக்தர்கள் கூட்டம் வருகை குறைந்து காணப்பட்டு வருவதால் கோவில் வளாகத்தில் கூட்ட நெரிசல் இன்றி பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். குறிப்பாக கோவிலின் நுழைவாயிலில் 100 கிலோ சந்தனத்தில் முருகன், வள்ளி, தெய்வானையுடன் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது பக்தர்களை வெகுவாக கவர்ந்தது கோவிலுக்கு வந்த பக்தர்கள் சந்தனத்துடன் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த முருகனுடன் புகைப்படம் எடுத்து சென்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடுத்தது போல் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடுக்காததால் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்து காரணப்பட்டு வருவதாகவும் மதியத்திற்கு மேல் கிருத்திகை பிறப்பதால் மதியம் முதல் இரவு வரை பக்தர்களின் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி