தமிழக மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். இதுகுறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியதாவது, “மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வாங்க ரூ. 2,000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக நிதியமைச்சர் கூறியிருக்கிறார். ஆனால், மானியக் கோரிக்கையில் இத்திட்டத்திற்கு ஒரு ரூபாய் கூட ஒதுக்கப்படவில்லை. யாரை ஏமாற்ற முயற்சிக்கிறார் அமைச்சர்? தமிழக மாணவர்களையா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.