ஆர்.கே. பேட்டை அருகே சொத்து தகராறில் கட்டிய மனைவியை ராணுவ வீரர் கொலை செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே. பேட்டை வட்டம் செல்லாத்தூர் கிராமத்தில் வசிப்பவர் ராணுவ வீரர் விஜயன். இவரது மனைவி மோகனா. இவர்களுக்கு திருமணம் நடைபெற்று 10 ஆண்டுகள் ஆன நிலையில் இரண்டு ஆண் பிள்ளைகள் இருக்கிறார்கள்.
அசாம் மாநிலத்தில் பணிபுரியும் ராணுவ வீரர் விஜயன் விடுமுறையில் தனது வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது விஜயனுக்கும், அவரது மனைவி மோகனா இடையே சொத்து தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ராணுவ வீரர் விஜயன், அவரது அண்ணனுக்கு சொத்துக்கள் கொடுத்து விடுவதாக ஏற்பட்ட பிரச்சனையில் மோகனா கேள்வி எழுப்பி உள்ளார். இதில் ஆத்திரமடைந்த ராணுவ வீரர் விஜயன் மனைவி மோகனவை கத்தியால் கழுத்தில் குத்தி கொலை செய்துள்ளார்.
இதனை எடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் ராணுவ வீரர் விஜயனை கைது செய்தனர். மேலும், கொலை செய்யப்பட்ட மோகனா பிரேதத்தை திருத்தணி அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பான விரிவான விசாரணையின் ஆர். கே. பேட்டை போலீசார் மேற்கொண்டுள்ளனர்.