பராமரிப்பின்றி உள்ள வருவாய் கோட்டாட்சியர் குடியிருப்பு

74பார்த்தது
பராமரிப்பின்றி உள்ள வருவாய் கோட்டாட்சியர் குடியிருப்பு
திருத்தணி காசிநாதபுரம் பகுதியில் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் தாசில்தார் அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த இரு அலுவலகம் நடுவில் வருவாய் கோட்டாட்சியர் தங்கி பணிபுரிவதற்கு பல லட்சம் ரூபாய் மதிப்பில் குடியிருப்பு வளாகம் கட்டி பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளது.

திருத்தணியில் பணிபுரியும் வருவாய் கோட்டாட்சியர் பெரும்பாலானோர் இந்த குடியிருப்பில் தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.

ஆனால். கடந்த வருடமாக பெண் கோட்டாட்சியர் பணிபுரிவதால் பாதுகாப்பு மற்றும் குடும்ப சூழ்நிலை கருதி குடியிருப்பில் தங்காமல் உள்ளார்.

இந்நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக வருவாய் கோட்டாட்சியர் குடியிருப்பு பூட்டியே கிடக்கிறது. இதனால் குடியிருப்பு கட்டடம் பராமரிப்பு இல்லாமல் உள்ளது. இதே நிலையில் இருந்தால் கோட்டாட்சியர் குடியிருப்பு சேதம் அடையும் அபாயம் உள்ளது.

எனவே மாவட்ட நிர்வாகம் வருவாய் கோட்டாட்சியர் குடியிருப்பை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்கின்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you