லூப்ரிகன்ட் ஆயில் திருடியவர்கள் கைது அதிகாரிகள் அதிரடி

76பார்த்தது
லூப்ரிகன்ட் ஆயில் திருடியவர்கள் கைது அதிகாரிகள் அதிரடி
திருவள்ளூர் மாவட்டம், எண்ணூரிலிருந்து ஸ்ரீபெரும்புதூர் இருங்காட்டைகோட்டையில் உள்ள பிரபல தனியார் கார் தொழிற்சாலை கார்களுக்கு பயன்படுத்தும் லூப்ரிகன்ட் ஆயிலை திருடி விற்பனை செய்வதாக குற்றப் புலனாய்வுத்துறையின் தலைவர் ஜோஷி நிர்மல்குமாருக்கு இமெயில் மூலம் தொடர்ந்து புகார்கள் வந்த நிலையில், விழுப்புரம் மாவட்ட துணை கண்காணிப்பாளர் மனோகர் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஹேமலதா உள்ளிட்ட தனிப்படை காவல் துறையினர் கள்ளிகுப்பம் சர்வீஸ் சாலை அருகே ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த ஒரு குடோனில் IOC லாரியை நிறுத்தி அதிலிருந்த லூப்ரிகன்ட் ஆயிலை சிலர் திருடிக் கொண்டிருந்தனர் அதைத் தொடர்ந்து போலீசார் அங்கிருந்த 4 பேரை காவல் நிலையம் அழைத்து வந்தனர். சுமார் 12000 லி. கொள்ளளவு டீசல் அடங்கிய லாரி மற்றும் பேரல்களில் சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்த 7000 லூப்ரிகன்ட் ஆயில் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டது.
தீவிர விசாரணையை தொடர்ந்த குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுதுறை அதிகாரிகள் தண்டையார்பேட்டையை சேர்ந்த லாரி உரிமையாளர் சோமசுந்தரம் மாதவரத்தை சேர்ந்த லாரி டிரைவர் சீனிவாசன் திருவொற்றியூரை சேர்ந்த லாரி கிளீனர் ரமேஷ் மற்றும் கொளத்தூரை சேர்ந்த குடோன் உதவியாளர் சதீஷ் ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து திருவள்ளுர் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ளவர்களை தேடிவருகின்றனர்.

தொடர்புடைய செய்தி