திருவள்ளூர்
மீன் பிடிப்பதில் இரு தரப்பினரையே ஏற்பட்ட பிரச்சனையால் ஒரு வருடகாலமாக மீன்பிடி தொழில் செய்ய முடியவில்லை. பிரச்சனைக்குஉரிய தீர்வு காண கோரி பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மீனவ கிராம மக்கள்
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அருகே உள்ள அவுரிவாக்கம் மேல்குப்பம் கிராமத்தில் 60-க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்களை சேர்ந்தவர்கள் மீன்பிடித்தொழில் செய்து வருகின்றனர். கடந்த ஓராண்டிற்கு முன்னர் இரு தரப்பிடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக திருப்பாலைவனம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு பொன்னேரி வட்டாட்சியர் மதிவாணன் தலைமையில் மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவர் தரப்பினரிடையே பிரச்சனைக்கு தீர்வு காண அமைதி சமரச பேச்சு வார்த்தை நடத்தியும் பிரச்சனைக்கு தீர்வு காணாததால் 60க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் தங்களால் தங்களால் மீன் பிடி தொழில் செய்ய முடியவில்லை தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி கோட்டாட்சியர் அலுவலகத்தினை
முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அங்கு வந்த பொன்னேரி காவல் துறையினர் மற்றும் வருவாய் துறையினர் அவர்களிடம் சமரசம் மேற்கொண்டு பிரச்சனைக்கு விரைவில் பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு தற்காலிகமாக கலைந்து சென்றனர்.